பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா…பரவியது எப்படி?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாமக்கல்லில் பிரசவித்த பெண்ணுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது பற்றிய விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

 

இதில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பு குழு அலுவலர்கள் ஆன ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் அமித் குமார் சிங் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்டத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 28 குடும்பத்தினர் 124 பேர் மற்றும் உறவினர்கள் 159 பேர் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்தார். நாமக்கல்லில் பிரசவித்த பெண்ணுக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில் அது அவருக்கு எங்கிருந்து எவர் மூலம் பரவியது என்பதை கண்டறியும் பணி நடைபெறுவதாக தெரிவித்தார்.

ஊரடங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

 

இதனால் பொருளாதாரத்தில் சிக்கியிருக்கும் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரொனா சிகிச்சைக்காக செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் தேமுதிக தலைமை அலுவலகமும் கொடுக்கப்பட்டுள்ளன .

 

தற்போது ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு தேவை அதிகமாக உள்ளது என்றும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

 

மே மூன்றாம் தேதிக்கு பிறகு நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்றும் தேமுதிக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க தயாராக இருக்குமாறு விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.


Leave a Reply