கேரளாவில் தொடர்ந்து குறையும் கொரோனா வைரஸ் பாதிப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கேரளாவில் ஒரே நாளில் 13 பேர் கொரொனாவிலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளனர். தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 172 இலிருந்து 173 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கேரளாவில் தான் முதன்முறையாக கொரொனா தொற்று கண்டறியப்பட்டது. பிற மாநிலங்களில் கொரொனா பரவல் தொற்று தொடங்கிய நேரத்தில் கேரளாவில் தான் அதிகம் பேர் கொரொனா தொற்றுக்கு ஆளாகி இருந்தார்கள்.

 

படிப்படியான நடவடிக்கைகளாலும் தீவிர கண்காணிப்பாளும் தற்போது கேரள அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அங்கு ஏப்ரல் பதினான்காம் தேதி மட்டும் 13 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 8 பேருக்கு மட்டுமே புதிதாக கொரொனா கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் துபாயில் இருந்து வந்தவர்கள் மற்றும் மூன்று பேரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

 

கேரளாவில் கொரொனா பாதித்த 391 பேரில் 211 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் கொரொனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 178 இலிருந்து 173 ஆக குறைந்துள்ளது. கேரளா முழுவதும் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 75 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

 

இதில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 511 பேர் வீடுகளிலும் 564 பேர் மருத்துவமனைகளிலும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை நோய் அறிகுறி உள்ள 16,235 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் 15 ஆயிரத்து 488 பேருக்கு தோற்று இல்லை என்பது தெரிய வந்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply