ஊடகங்களை குற்றம் சாட்டிய டொனால்டு டிரம்ப்…யூ fake!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊடகங்கள் தங்களிடம் நட்பு பாராட்டவில்லை மாறாக தன்னை கொடூரன் போல சித்தரிக்கின்றனர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆவேசமாக குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், செய்தியாளர்களிடம் எலியும் பூனையுமாக நடந்து கொள்வது இயல்புதான். காரணம் தான் சொல்வதே சரி என்று ஆதிக்க மனப்பான்மை ட்ரம்ப்பிடம் உண்டு என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

கொரொனா வைரஸால் கொத்துக்கொத்தாக பலர் உயிரிழக்கும் எந்த சூழலிலும் தன் ஆதிக்க மனப்பான்மையை டொனால்டு டிரம்ப் விட்டு விடவில்லை என கூறுகின்றனர். கொரொனா தொற்று தலைகாட்டத் தொடங்கிய நிமிடமே அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தால் இத்தனை உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என அந்நாட்டு தொற்றுநோய் நிபுணர் அந்தோணி கூறியிருக்கிறார்.

 

மேலும் இரு மாதங்களுக்கு முன்பே நோயின் தீவிரத்தையும், ஆபத்தையும் குறித்து சுகாதாரத் துறை அமைச்சரிடம் எச்சரித்துள்ளார். ஆனால் அவை எதையுமே டொனால்டு டிரம்ப் பொருட்படுத்த வில்லை என கூறப்படுகிறது. தற்போது நிலை கை மீறிப் போனதால் செய்வதறியாது திகைத்து நின்ற டொனால்டு டிரம்ப் கொரொனா விவகாரத்தில் தனக்கு ஆலோசகராக இருந்த தொற்று நோய் நிபுணரான மருத்துவர் பாசியை நீக்கப் போவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

 

இதனால் ஆத்திரமடைந்த டொனால்டு டிரம்ப் ஊடகங்கள் தன்னிடம் நட்பு பாராட்டவில்லை மாறாக தன்னைக் கொடூரன் போல சித்தரிக்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஊடகங்கள் ஒரு தகவலை எப்படி செய்தியாக்க வேண்டுமோ அது போன்று செய்யவில்லை என்றும் தனக்கு எதிராக எப்பவும் போலி செய்திகளை பரப்பி வருவதாகவும் சாடினார்.

 

வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பல தலைவர்களும், பொதுமக்களும் அவரை பெருமையாக பேசும் வீடியோக்களை போட்டுக்காட்டி பெருமிதம் கொண்டார் டொனால்டு டிரம்ப். இப்படி ஒரு நெருக்கடியான சூழலில் இதெல்லாம் தேவையா என கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் நீங்கள் போலியான நிருபர் மிகவும் இழிவானவர் என ஆவேசமானார் அதிபர்.

 

தன் மேல் இருக்கும் தவறையும் நாட்டின் நிலைமையையும் நினைத்துப் பார்க்காமல் ஒவ்வொரு முறையும் இவ்வாறு செய்தியாளர்களிடம் சினம் கொள்வது ஊடகங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply