கேரளாவில் வீட்டு வாடகை தராததால் 48 குடும்பங்கள் வெளியே துரத்தப்படும் நிலை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கேரளாவில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத 48 தமிழ் குடும்பங்களை வீட்டு உரிமையாளர் வெளியேற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவில் கொள் வாயிலில் கிராமத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 48 தமிழ் குடும்பங்கள் வசித்து வந்தன. மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்தனர்.

 

இந்த சூழலில் வீட்டு உரிமையாளர் வாடகை தருமாறு நிர்பந்தம் செய்வதோடு சில வீடுகளில் இருந்த பொருட்களையும் வெளியே வீசி இருக்கிறார். கையில் பணமில்லாத நிலையில் இந்த குடும்பங்கள் தற்போது நடு வீதிக்கு வந்துள்ளன.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மகாத்மா காந்தி போல் வேடமணிந்து கொரொனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் கொரொனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரொனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

 

இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மகாத்மா காந்தி போல் வேடமணிந்து கொரொனா குறித்து பொதுமக்களுக்கு தன்னார்வலர் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சானிடைசர்களை இலவசமாக வழங்கி கொரொனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.


Leave a Reply