திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரொனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட பரிசோதனையின் முடிவில் திருச்சியில் 4 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் ஒரு வயதுடைய குழந்தைக்குக் கொரொனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் குழந்தையுடன் தாயாரும் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 

ஏற்கனவே கொரொனாவால் பாதிக்கப்பட்ட தந்தையிடமிருந்து அந்த குழந்தைக்கு கொரொனா பரவியது தெரியவந்துள்ளது. கொரொனா வைரஸ் நிவாரண நிதியாக ரூபாய் 7500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் கொரொனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

 

இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலையில் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மருந்து கண்டுபிடிக்கவும் மக்களுக்கொரொனாவுக்கு உதவும் நோக்கில் பல்வேறு நிறுவனங்கள் பல கோடிபணத்தை நிவாரண நிதியாக வழங்கிவருகின்றன.


Leave a Reply