--- --:--:-- --

ஊரடங்கை நாடு முழுவதும் நீட்டிக்க வேண்டும்..! பிரதமரிடம் மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்!!

zsvfs

கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகும் நிலையில் ஊரடங்கை நாடு முழுவதும் நீட்டிக்க வேண்டுமே ஒழிய, பகுதிவாரியாக நீட்டிக்கும் முடிவை ஒரு போதும் எடுக்க வேண்டாம் என பிரதமர் மோடியிடம், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நிலவரம் மற்றும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பாக எந்த நேரமும் மாநில முதல்வர்கள் தம்மை அணுகலாம் எனவும், ஆலோசனைகளையும் வழங்கலாம் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே,டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும், நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

மாநிலங்கள் அல்லது பகுதிவாரியாக ஊரட்ங்கை நீட்டிப்பதோ, தளர்த்துவதோ, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்து விடும் எனவும் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் பல்வேறு மாநில முதல்வர்கள் குரல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon