கொரோனாவுக்கு புதுச்சேரி மாநிலத்தில் முதல் பலி..! மாஹேவைச் சேர்ந்த 71 வயது முதியவர் உயிரிழப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரஸ் பாதிப்பால் புதுச்சேரி மாநிலத்தில் 71 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தான் அந்த மாநிலத்தில் முதல் உயிரிழப்பு என்பதால் பீதி நிலவுகிறது.

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எந்த மாநிலம் தப்பவில்லை. வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது வரை 7600 பேருக்கு வைரஸ் நோய்த் தொற்று உறுதியாகி, பலி எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது. தமிழகத்திலும் 911 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்திற்கு அருகிலுள்ள சின்னஞ் சிறிய புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து 9 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் புதுச்சேரியின் அங்கமாக திகழும் கேரளா அருகிலுள்ள மாஹே பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு கேரளாவின் கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்ததாக புதுச்சேரி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.


Leave a Reply