கொரோனா நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்..! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும், கொரோனா நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு திமுக முழு ஒத்துழைப்பு வழங்கும். ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த முடிவை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனே எடுக்கவேண்டும் .

ஊரடங்கால் பாதிக்கப்படுவோரின் வாழ்வாதாரத்திற்கு தேவையானவற்றை அரசு உடனே உறுதி செய்யவேண்டும். கொரோனோ நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ.5000 மற்றும் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனையை இலவசமாக்க வேண்டும்.

 

எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
எம்.எல்.ஏக்களின் தார்மீக உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல. மக்கள் நலனுக்காகதான் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்எல்ஏக்கள் பயன்படுத்துகிறார்கள் என கடிதத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளது.


Leave a Reply