தூத்துக்குடி மாவட்டத்தில் கொரொனா வைரசுக்கு மருத்துவ பணியாளர் பலி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போல்டன்புரம் பகுதியை சேர்ந்த டெல்சி என்பவர் கொரொனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப்-டெக்னீஷியன் ஆக பணியாற்றி வருகிறார்.

 

அவரை தொடர்ந்து அவரது கணவர் பாக்யராஜ் மற்றும் மாமியார் அந்தோணியம்மாள் ஆகியோருக்கும் உறுதிசெய்யப்பட்டது. அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் அந்தோணியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .இதனால் தமிழகத்தில் கொரொனா உயிரிழப்பு ஒன்பதாக அதிகரித்துள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்கடை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் செயல்படும் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொது மக்கள் அதிகம் கூடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இதனை கண்காணிக்க உதவி ஆணையாளர்கள் தலைமையில் 10 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறினார். இந்த உத்தரவை மீறும் கடைகளுக்கு சீல் வைக்க படுவதுடன் கடையின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார்.


Leave a Reply