--- --:--:-- --

இந்தோனேசியாவில் கிருமிநாசினியாக பயன்படுத்தப்படும் பனைமர “கள்” !!

5

சீனாவில் உருவான கொரோனா என்ற உயிர்க் கொல்லி வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது.கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முக கவசம் அணிய வேண்டுமென்றும், கிருமிநாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டு மென்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வருகிறது.

 

இதன் காரணமாக பல நாடுகளில் முக கவசம் மற்றும் கிருமிநாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தோனே சியா நாட்டில் உள்ள பாலி தீவில் கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

 

எனினும் இந்த தீவை சேர்ந்த மருத்துவ ஊழியர்கள் கிருமிநாசினிக்காக அந்த நாட்டு அரசின் உதவியையோ அல்லது பிறநாடுகளின் உதவியையோ நாடவில்லை. மாறாக அவர்கள் பனைமரத்தில் இருந்து கிடைக்கும் கள்ளை கிருமிநாசினியாக பயன்படுத்த தொடங்கினர்.

 

இந்த தனித்துவமான யோசனை நல்ல பலனளித்து வருவதாக வும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உள்ளூரை சேர்ந்த உற்பத்தியாளர்கள் தாமாக முன்வந்து 4 ஆயிரம் லிட்டர் கள்ளை நன்கொடையாக வழங்கினர்.இது தவிர பாலி தீவை சேர்ந்த போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் கள் சேகரிக்கும் தீவிர பணியில் உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon