கொரோனா பரவாமல் தடுக்க மேலும் 3 வாரங்கள் தேவை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவை கட்டுப்படுத்த 3 வாரங்கள் தேவைப்படுவதாக மாநில அரசுகள் கூறியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாடு முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கொரொனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

 

தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களிலிருந்தும் அறிக்கைகள் பெறப்பட்டு வருவதாகக் கூறிய அவர் கொரொனாவைக் கட்டுப்படுத்த சமூக விலகல் தான் சிறந்த மருந்து எனவும் குறிப்பிட்டார். மேலும் ஊரடங்கு என்பது சமூக ரீதியான மருந்து போன்றது என அவர் கூறினார்.

 

கொரொனாவை கட்டப்படுத்த மூன்று வாரங்கள் தேவைப்படுவதாக மாநில அரசுகள் கூறி இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உத்தரவு முறையாக கடைப்பிடிக்கப்படுவது குறித்து மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவது கடினம் என்று ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டார்.


Leave a Reply