மருத்துவமனையிலேயே தங்கி சேவை செய்யும் கடவுளர்களாகிய மருத்துவர்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையில் கொரொனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் வீடுகளுக்கு செல்லாமல் அரசு மருத்துவமனை விடுதியிலேயே தங்கியிருந்து சேவை ஆற்றி வருகிறார்கள். கொரொனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளன . ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் குடும்பத்தை விட்டு விலகியே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்கள் சமூக பரவலை தடுப்பதற்காக வீடுகளுக்கு செல்லாமல் பணி முடிந்தபின் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியுள்ளனர்.


Leave a Reply