ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா ? பிரதமர் நாளை முக்கிய ஆலோசனை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இதில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா? அல்லது விலக்கிக் கொள்வதா? என்பது குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் விரிவான ஆலோசனை நடத்த உள்ளார். கொரொனா பரவுவதை தடுக்க கடந்த மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

 

வரும் 14ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரொனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என கருதும் பல மாநிலங்கள் ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரிசா அரசு ஒருபடி மேலே சென்று தங்கள் மாநிலத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது.

 

முன்னதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசிய பிரதமர் மோடி ஊரடங்கு ஒரேடியாக விலக்கப்படாது என்றும் படிப்படியாக மட்டுமே விலக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். உயிர்களைக் காப்பதற்கு அரசு முன்னுரிமை தரப்படும் என்றும் அப்போது பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநில மாவட்ட நிர்வாகங்கள் நிபுணர்கள் கூறி இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

இவற்றை வைத்து பார்க்கும்போது ஊரடங்கு நீட்டிக்க படவே வாய்ப்பு அதிகம் என தெரிகிறது. கொரொனா குறித்து ஏற்கனவே மார்ச் 24, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் முதலமைச்சர்களுடன் பிரதமர் பேசியிருந்தார். இந்தநிலையில் நாளைய கூட்டத்திற்கு பின் பிரதமர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Leave a Reply