--- --:--:-- --

சவுதி மன்னரின் அரண்மணையில் 150 பேருக்கு கொரோனா…அதிர்ச்சி தகவல்!

2

சவுதி மன்னர் குடும்பத்தில் உயர் பதவியிலுள்ள 12 பேர் உட்பட அரண்மனையில் 150 பேருக்கு கொரொனா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 16 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் கொரொனாவுக்கு 2,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

41 பேர் பலியாகியுள்ளனர். கொரொனா பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சவுதி மன்னர் குடும்பத்தில் உயர் பதவியிலுள்ள 12 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகி உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களின் ரியக் மாகாண கவர்னராக உள்ள பைசல் அப்துல் என்பவருக்கு கொரொனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

 

இவரை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சவுதி அரண்மனையில் 150 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து மன்னர் பட்டத்து இளவரசர் ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இதற்கிடையே மன்னர் குடும்பத்தில் கொரொனா பரவியுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை தயார் படுத்தப் பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon