பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பாலிவுட் நடிகர்கள் ஏற்றிய தீபம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்ளிட்டோரும் தங்களது இல்லங்களில் விளக்கு ஏற்றி வைத்தனர். நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக தமிழகத்திலும் நடிகர், நடிகைகள் தங்களது இல்லங்களில் தீப ஒளி ஏற்றினார்.

 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமது இல்லத்திற்கு வெளியே நடிகர் ரஜினிகாந்த் மெழுகுவர்த்தி ஏற்றினார். இதேபோல் நடிகை நயன்தாரா கைகளில் விளக்கு ஏந்திய படி இருக்கும் புகைப்படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கங்கனா ரனாத், கீர்த்தி சனோன் உள்ளிட்டோரும் தீப ஒளி ஏற்றினார். மேலும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்,பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து உள்ளிட்டோரும் தங்கள் இல்லங்களில் மின் விளக்குகளை அணைத்து விட்டு தீப ஒளி ஏற்றினார்.

 

பிரதமரின் வேண்டுகோளை வரவேற்று அரசியல் தலைவர் விஜயகாந்த் தனது மனைவி மற்றும் அவர் பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து இல்லங்களில் விளக்கேற்றினர்.


Leave a Reply