9 நிமிடங்களில் தமிழகத்தில் எத்தனை மெகாவாட் மின்சார பயன்பாடு குறைந்தது தெரியுமா..?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை அணைத்து அதன் மூலம் 31,000 மெகாவாட் அளவுக்கு மின்சார பயன்பாடு குறைந்திருப்பதாக தமிழ்நாடு மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

 

ஒரே நேரத்தில் பெரும்பாலானோர் மின்விளக்குகளை அணைத்து மீண்டும் ஆன் செய்வதன் மூலம் தமிழகத்தின் மின்சாரப் பயன்பாட்டில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் அந்த குறிப்பிட்ட 9 நிமிடங்களில் மாநிலத்தில் 2,200 மெகாவாட் மின்சார பயன்பாடு குறைந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

சென்னையில் மட்டும் 350 மெகாவாட் அளவிற்கு மின்சார பயன்பாடு குறைந்து இருந்ததாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.


Leave a Reply