கொரோனா பாதித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பரபரப்பாக இயங்கிய ஒவ்வொருவரையும் வீட்டிற்குள் முடக்கிப் போட்ட கொரொனா வைரஸ் தொற்று தாக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே கொரொனாவுக்கு 3 பேர் பலியாகி இருக்கும் நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் உயிரிழந்தார்.

 

ஏற்கனவே கடந்த 2ஆம் தேதி இதே மருத்துவமனையில் மரணமடைந்த 72 வயது முதியவரின் ரத்த மாதிரி சோதனை முடிவில் இவரும் கொரொனாவுக்கு பலியாகி இருப்பது உறுதியானது. எனவே ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழப்பு உறுதியானதை அடுத்து தமிழகத்தில் கொரொனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

 

தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 32 மாவட்டங்களில் 95 பெயருடன் சென்னை முதலிடம் வகிக்கிறது. கோவையில் 58 பேரும், திண்டுக்கல்லில் 45 பேரும், திருநெல்வேலியில் 38 பேரும், ஈரோட்டில் 32 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டையில் தலா 25 பேரும், தேனி மற்றும் கரூரில் 23 பேரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

 

செங்கல்பட்டில் 22 பேர், மதுரையில் 19 பேர், திருச்சியில் 17 பேர், விழுப்புரத்தில் 15 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர், சேலம், திருவள்ளூரில் தலா 12 பேர், விருதுநகர், தூத்துக்குடி, நாகையில் தலா 11 பேர், திருப்பத்தூர், கடலூரில் தலா 10 பேர் என மொத்தம் 577 பேர் குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 86 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட 571 பேரில் 522 பெயர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று விட்டு தமிழகம் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply