ஊரடங்கால் தூய்மை ஆகும் கங்கை நதி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் உத்தரபிரதேசத்தில் கங்கை ஆற்று நீரின் தரம் மேம்பட்டுள்ளது. கொரொனா வைரசை தடுக்க மார்ச் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

இதனால் கங்கை, யமுனை ஆறுகளின் கரைகளில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளதால் அவற்றிலிருந்து கழிவுகள் வெளியேறி ஆற்றில் கலப்பது முற்றிலும் நின்று போய் உள்ளது. இதனால் கான்பூரில் கங்கை ஆற்று நீரின் தரம் முன்பை விட 50 விழுக்காடு அளவிற்கு மேம்பட்டு உள்ளதாக இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட வாரணாசியின் பேராசிரியர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


Leave a Reply