ஏ‌டி‌எம் தேவையில்லை!வீடு தேடி வந்து பணம் கொடுக்கும் ஏ‌இ‌பி‌எஸ் சேவை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் செல்லும் தேவையை குறைத்து கட்டணம் ஏதுமின்றி வீடுதேடி பணத்தை கொண்டு வந்து கொடுக்கும் மகத்தான சேவையை இந்திய அஞ்சல்துறை வழங்கி வருகிறது.

 

ஆதார் எனபீல்டு பேமண்ட் சர்வீசஸ் ஏ‌இ‌பி‌எஸ் எனும் அந்த சேவையை அஞ்சல்துறை வங்கியில் கணக்கு வைத்திருப்போர் மட்டுமின்றி பிற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பெற முடியும். வங்கிக் கணக்குடன் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை இணைத்து அவர்கள் அஞ்சலகத்தில் தொடர்பு கொண்டு வேண்டிய தொகையை கூறினால் 24 மணி நேரத்தில் அஞ்சல்காரர் வீடு தேடி பணத்தை கொண்டு வருவார்.

 

அவரிடம் இருக்கும் போஸ்ட்மேன் செயலியில் வங்கி கணக்குடன் இணைக்க தொலைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபி மற்றும் கைவிரல் ரேகையை உள்ளீடு செய்து விட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம். கடந்த ஓராண்டாக அதை பயன்பாட்டில் இருக்கும் அந்த சேவை ஊரடங்கு காலத்தில் மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது.

 

இந்த சேவையின் மூலம் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்க முடியும்.


Leave a Reply