தனியார் கல்லூரிகளை கொரோனா மருத்துவமனைகளாக மாற்ற மனு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் தனியார் கல்லூரிகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகள் மற்றும் மாணவர் விடுதிகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி அங்கு கொரொனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சாலையோரம் வசிப்பவர்கள் போன்றவர்களை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

 

தனியார் கல்லூரிகள் மற்றும் மாணவர் விடுதிகளை மருத்துவமனைகள் ஆக்கி தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றுவதன் மூலம் 50,000 படுக்கைகளை ஏற்படுத்த முடியும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை காணொளி மூலம் விசாரித்த நீதிபதிகள் இரு வாரங்களில் பதில் தர தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.


Leave a Reply