கொரொனா பாதிப்புக்காக பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஏ‌ஆர் ரஹ்மான் கூறியது என்ன?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மத வழிபாட்டு தலங்களுக்கு கூட்டமாக வருவதற்கான நேரம் இது அல்ல என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். இந்தியாவில் கொரொனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் துணிச்சலுக்கும் தன்னலமற்ற உதவிக்கும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நன்றி தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர் தொற்று நோயை சமாளிக்க மருத்துவ ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுவதாகவும், உலகத்தை தலைகீழாக மாற்றி இருக்கும் இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக நம் வேறுபாடுகளை மறந்து ஒன்று படுவதற்கான நேரமிது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

கடவுள் உங்கள் இதயத்திற்குள் இருக்கிறார். அதுவே புனிதமான சன்னிதி என்று குறிப்பிட்டிருக்க கூடியவர் மத வழிபாட்டு தலங்களுக்கு கூடி வருவதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல என்றும் அறிவுறுத்தியுள்ளார்.


Leave a Reply