ஸ்டைலாக முடி வெட்டிக்கொண்டு சுற்றும் புள்ளிங்கோ பூனை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


கொரொனாவால் உலகமே முடங்கி கிடக்கும் வேளையில் தங்களின் செல்ல பூனைகளுக்கு ஸ்டைலில் முடிவெட்டி வண்ணம் பூசும் பழக்கம் உலகம் முழுவதும் மக்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. கரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் பெரும்பாலான நாடுகள் மக்கள் வெளியே சுற்றுவதற்கு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் பொழுது போகாத யாரோ ஒருவர் தான் வளர்க்கும் பூனைக்கு ஸ்டைலில் முடியை வெட்டி விட்டு அதற்கு பச்சை வண்ணம் பூசி இணையத்தில் வீடியோவை உலாவ விட்டார்.

 

இதனைக் கண்ட ஏராளமான மக்கள் தாங்கள் வளர்க்கும் பூனைகளையும் அதேபோல் முடியை கத்தரித்து பல வண்ணம் பூசி தங்களின் பொழுதைப் போக்கிக் கொள்கின்றனர்.


Leave a Reply