ஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மொழி உள்ளிட்ட தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து தமிழகத்தில் பிரபலமான நடிகர் பிரித்திவிராஜ் .அவரது படப்பிடிப்பு குழுவினரும் ஜோர்டானின் சிக்கி தவித்து வருகின்றனர். பிரபல மலையாள இயக்குனர் புரூஸ்லி, பிரித்திவிராஜை வைத்து ஆடுஜீவிதம் படத்தை எடுத்து வருகிறார்.

 

சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்று அங்கு ஆடு மேய்க்கும் பணிக்கு தள்ளப்படும் இளைஞனின் கதை இது. ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்னர் படப்பிடிப்பிற்காக ஜோர்டானுக்கு போன படக்குழுவினர் விமான சேவைகள் ரத்தானதால் இப்போது நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

தங்களை எப்படியாவது நாடு திரும்ப உதவுமாறு அவர்கள் பிலிம்சேம்பர் ஐ தொடர்பு கொண்டுள்ள நிலையில் கேரள முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


Leave a Reply