பூமிக்கு மிக வரப்போகும் வால் நட்சத்திரம்! ஏதேனும் பாதிப்பு உண்டா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வியாழன் கிரகத்தை விட 5 மடங்கு பெரிய வால் நட்சத்திரம் ஒன்று இந்த மாத இறுதியில் பூமிக்கு வந்து செல்லும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பால்வெளி மண்டலத்தில் உள்ள ஒரிசா மேஜர் என்ற இடத்தில் கடந்த ஆண்டின் இறுதியில் மிகப் பெரிய வால் நட்சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

 

வியாழன் கிரகத்தை விட 5 மடங்கு பெரிய நட்சத்திரம் ஆன இதில் பாறைகளும், படிமங்களும் இருப்பதால் அதிகமாக ஒளிரும் தன்மையுடன் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வால் நட்சத்திரம் இந்த மாதத்தின் இறுதியில் பூமிக்கு அருகே வந்து செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

பூமியில் இருந்து 72 மில்லியன் மைல் தூரத்தில் செல்வதால் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறும் ஆய்வாளர்கள் டெலஸ்கோப் மற்றும் பைனாகுலர் மூலம் இதனை காண முடியும் என்று கூறியுள்ளனர்.


Leave a Reply