கொரோனாவிலிருந்து குணமடைந்த கனடா பிரதமர் மனைவி சோபியா ட்ரூடோ!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் தொற்றிலிருந்து கனடா பிரதமர் ஜஸ்டின் மனைவி குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் கொரொனா வைரஸ் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபியா ட்ரூடோவிற்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சோபியா ட்ரூடோ தனிமைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரொனா வைரஸிலிருந்து குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சோபியா ட்ரூடோ தான் முன்பைவிடநலமாக இருக்கிறேன் என்றும் தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் என் இதயத்தின் அடியிலிருந்து நன்றி கூறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

கொரொனா வைரஸுக்கு கனடா நாட்டில் 5 ஆயிரத்து 655 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 61 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply