தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்! காதலிக்காக தப்பித்து ஓட்டம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சிவகங்கை மாவட்டம் வளையப்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளன.

 

இதுபற்றி அந்த பெண் விஜய்க்கு தொலைபேசியில் தெரிவித்ததையடுத்து அங்கிருந்து விமானம் மூலம் கிளம்பி மதுரை விமான நிலையம் வந்துள்ளார். அப்போது கொரொனா வைரஸ் காரணமாக விஜய்யை அங்கிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது பெற்றோர் ஒப்புதலுடன் திருப்பரங்குன்றம் அருகே அடைக்கப்பட்ட தனிமைப்படுத்தும் வார்டில் சோதனைக்காக அனுமதித்துள்ளனர்.

 

இந்தநிலையில் காதலியின் திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் தனிமையில் இருந்து தப்பி சென்ற விஜய் சொந்த கிராமத்திற்கு நள்ளிரவில் சென்று காதலியை அழைத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அங்கிருந்து தப்பித்து சென்ற இளைஞர் குறித்து மதுரை சுகாதாரத்துறை அதிகாரி திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில் விஜய் மீது தாய் மீனாள் மற்றும் கால் முறிந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் தம்பியையும் அடித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இதனையடுத்து தாய் மற்றும் சகோதரர்களை தாக்கி செல்போனை பறித்து காதலியுடன் தப்பிச்சென்ற விஜயை பிடித்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Leave a Reply