கொரொனாவால் ஆரம்பித்த விவாதம்..கொலையில் முடிந்தது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நீலகிரி மாவட்டம் உதகையில் கொரொனா குறித்த டீக்கடை விவாதம் மோதலாகி கொலையில் முடிந்துள்ளது. உதகை நொண்டிமெடு பகுதியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் மார்க்கெட் பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று குறித்து பேசிக் கொண்டு உள்ளார்.

 

அப்போது அங்கு வந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தேவதாசி என்ற நபர் தொற்றிக்கொள்ளும் தள்ளி நின்று பேசுங்கள் என ஜோதிமணியிடம் கூறவே அதனை அவமானமாக கருதிய ஜோதிமணி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாகி அங்கு வாழைக்காய் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து தேவதாஸ் ஜோதிமணியை குத்தியதாக கூறப்படும் நிலையில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். தேவதாசை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply