கொரொனாவால் பசியால் இருக்கும் குரங்குகள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் தொற்றால் தாய்லாந்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகக் குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து லோபூரி மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயத்திலுள்ள குரங்குகளுக்கு உணவு கொடுக்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதனால் சாப்பாட்டிற்காக குரங்குகள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற காணொளி கடந்த வாரம் வலைதளங்களில் வைரல் ஆனது. இதை தொடர்ந்து அப்பகுதி வாழ் மக்கள் தாங்களாக முன்வந்து குரங்குகளுக்கு மீதமான சாப்பாட்டையும், தின்பண்டங்களையும் வழங்கி வருகின்றனர்.


Leave a Reply