1 லட்சம் பேரை வேலைக்கு எடுக்கும் அமேசான்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அமெரிக்காவில் சேமிப்பு கிடங்குகள் மற்றும் டோர் டெலிவரி பணிகளுக்காக சுமார் ஒரு லட்சம் பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது . கொரொனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலையில் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வது பெருமளவு அதிகரித்துள்ளது.

 

அமெரிக்காவின் அமேசான் மட்டுமின்றி அல்பர்ட்சன்ஸ் போன்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களுக்கு ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரித்திருப்பதால் கூடுதலாக வேலைக்கு ஆட்களை எடுக்க உள்ளனர்.

 

அதேசமயம் கொரொனா காரணமாக மூடப்பட்ட உணவகங்கள், பயண ஏற்பாடு நிறுவனங்களில் திடீரென வேலை இழந்தவர்களை பயன்படுத்திக் கொள்ள உள்ளதாக அமேசான் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


Leave a Reply