கொரானா குணமடைந்தததை உறுதிப்படுத்துவது எப்படி?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் குணமடைந்த பிறகு 24 மணி நேரத்தில் 2 முறை மாதிரிகளை எடுத்து பரிசோதித்து இரண்டிலும் நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டும் வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இதுதொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மத்திய அரசு நோயாளி குணமடைந்து விட்டது மார்பக பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது. கொரொனா அறிகுறியுடன் வருபவர்களை சோதிக்கும் போது தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் காட்டினாலும் மருத்துவர்கள் ஆலோசனையின் பெயரில் வீடு திரும்ப அனுமதித்தாலும் 14 நாட்கள் கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

கொரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை இந்த கொள்கை முடிவுகளை வெளியிட்டுள்ளது.


Leave a Reply