குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் ஸ்ரீபிரியா பங்கேற்று ஆதரவு

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் நடிகை ஸ்ரீபிரியா, கமீலா நாசர் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இந்த போராட்டத்தையொட்டி தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளான நடிகை ஸ்ரீபிரியா, கமீலா நாசர் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.


Leave a Reply