கொரோனா வைரஸ் வகை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்திருந்த அவரது மகன் மூலம் பாதிப்புக்கு ஆளான மூதாட்டி டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்தியாவில் கொரொனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா திரும்பிய கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியை சேர்ந்த 76 வயது முதியவர் முகமது உசேன் பாதிப்பால் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி ஆய்வுகள் மூலம் அவர் கொரொனா பாதிப்பால்தான் உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.