65 வாகனங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு..காவல்துறையின் செயல்!
தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று கிடந்த 65 இருசக்கர வாகனங்கள் போலீசாரால் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மாநகர பகுதிகளில் ஆங்காங்கே இருந்த இரு சக்கர வாகனங்களை மீட்ட போலீசார் அவற்றின் என்ஜின் உள்ளிட்டவை மூலம் உரிமையாளர்களை கண்டறிந்தனர்.
தென்பாகம் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த இரு சக்கர வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் ஒப்படைக்கப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




