கொரானா பரிசோதனை செய்யும் ரோபோ!

கொரானா பாதித்த நோயாளிகளுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் ரோபோ ஒன்றை சீனாவை சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

 

கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் அவர்களுக்கு உதவி புரியும் வகையில் இந்த ரோபோவை உருவாக்கி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த ரோபோ மூலம் மருத்துவர் நோயாளிகளை நெருங்காமலேயே மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். தற்போது இரண்டு ரோபோக்களை உருவாக்கியுள்ள இந்த குழுவினர் அவற்றை சோதனை முறையில் மருத்துவமனைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

 

இது போன்ற ரோபோவை தயாரிக்க இந்திய மதிப்பில் 54 லட்சம் ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply