சிஏஏ எதிர்ப்பு போராட்டம் குறித்த வழக்கு!

தமிழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்த வழக்குகளில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், டி‌ஜி‌பிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 14ம் தேதி முதல் நடைபெற்று வரும் போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை.

 

போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன .18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், கிருஷ்ண ராமசாமி ஆகியோரது அமர்வு அனுமதி இல்லாமல் நடைபெறும் போராட்டங்கள் மீது வழக்கு பதிவு செய்து விட்டால் போராட்டத்தை தொடரலாம் என்று பொருளா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

 

நீதிமன்றத்தை யாரேனும் நாடும் வரை ஏன் காத்திருக்கிறீர்கள் என்ற நீதிபதிகள் இரு தரப்பையும் திருப்திப்படுத்த நினைக்கிறீர்களா என்றனர். வழக்கு குறித்து ஒரு வாரத்தில் தமிழக அரசும் காவல்துறை தலைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Leave a Reply