திருவாடானையில் ஊராட்சி துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு!!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உள்ள 47 ஊராட்சிகளில் உள்ள துணைத்தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் திருவாடானை சினேகவல்லிபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் கூட்டமைப்பு ஏற்படுத்தி அதன் மூலம் துணைத்தலைவர்களின் நலன் காத்தல், முழுமையாக மக்கள் பணியாற்றுதல், அதற்காக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது என்பது பற்றிய ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சிகள் துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு தலைவராக அஞ்சுகோட்டை கணேசன், செயலாளராக ஓரியூர் அசரப் அலி, பொருளாளராக கோடனூர் சேகர், இணை செயலாளராக தளிர்மருங்கூர் அமலகுஷ்பம், துணை செயராளராக கட்டவிளாகம் சித்தநாதன், துணைத்தலைவராக மாவூர் ரேவதி, துணை பொருளாளராக முகிழ்தகம் காத்தாயி மற்றும் கௌரவ தலைவர்களாக புல்லக்கடம்பன் மனோகரன், கருமொழி குழந்தைச்சாமி, பதனக்குடி போஸ், அரும்பூர் காந்திமதி, ஆண்டாவூரணி செபஸ்தியான ஆகியோர் மற்றும் நிர்வ வாக குழு உறுப்பினாகள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வரும் காலங்களில் மாவட்ட அளவில் கூட்டமைப்பு நடத்தி மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க போவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராக வழக்கறிஞர் காமராஜ் நியமிக்கப்பட்டனர்.


Leave a Reply