சொகுசு கப்பலில் தமிழர் ஒருவருக்கு கொரோனா

ஜப்பான் துறைமுகத்தில் உள்ள சொகுசு கப்பலில் தமிழர் ஒருவருக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட மதுரையை சேர்ந்தவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

 

டைமன் ப்ரின்சஸ் சொகுசு கப்பலில் கொரொனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் ஜப்பான் துறைமுகத்தில் அந்த கப்பல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் 120 இந்தியர்கள் உட்பட 5 தமிழர்கள் சிக்கி தவித்தனர். இதை அறிந்த இந்திய அரசு அவர்களை விமானம் மூலம் ஹரியானா அழைத்து வந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளது.

 

அந்தக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட மதுரையை சேர்ந்த அன்பழகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜப்பான் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்ட கப்பலில் இருந்து கோவில்பட்டியை சேர்ந்த தாமோதரன் என்பவருக்கு கொரொனா இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

இதனால் மத்திய அரசு தாமோதரனை ஜப்பானிலிருந்து அழைத்து வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply