--- --:--:-- --

அமித்ஷா பயணத்துக்கு சீனா எதிர்ப்பு

3

அருணாச்சல பிரதேசத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த மாநிலம் உருவாக்கப்பட்ட தான் முப்பத்தி நான்காம் ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அமித்ஷா நேற்று கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

 

இந்த பயணம் குறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கிங்ஸ் வாங்கு அருணாச்சலபிரதேசம் என அழைக்கப்படும் பகுதியை சீன அரசு அங்கீகரிக்கவில்லை என்றும் அப்பகுதி திபெத்தின் தென்பகுதி என்பதில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறது என்றும் கூறினார்.

 

அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய தலைவர்கள் செல்வது சீன இறையாண்மைக்கு எதிரானது எனவும், எல்லையில் நிலவும் ஸ்திரத்தன்மை, இருநாடுகள் இடையே பரஸ்பர அரசியல் நம்பிக்கையை பாதிக்கும் செயல் எனவும் இரு நாடுகளின் ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon