அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சர்ச்சைகளும் எழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24ஆம் தேதி இந்தியா வருகிறார்.ட்ரம்ப் கலந்துகொள்ளும் மூன்று மணிநேர நிகழ்ச்சிக்காக குஜராத் அரசு 115 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது.
அகமதாபாத்திலிருந்து ஆக்ரா செல்லும் ட்ரம்ப் தாஜ்மகாலை பார்வையிடுகிறார். இவருக்காக தாஜ்மகாலை சுற்றி உள்ள சாலைகளை அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே ட்ரம்ப் வருகையை அடுத்து அகமதாபாத்தில் குடிசைவாழ் பகுதிகள் சுவர் எழுப்பி மறைக்கப்படுவதாக செய்திகள் வெளியானது.
இதனை விமர்சித்துள்ள சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கை இது இந்தியர்களின் அடிமை மனோபாவத்தை காட்டுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் :
உயர் ரக போதைப் பொருள் தயாரித்து விற்பனை செய்த வேதியியல் ஆசிரியர்கள்..!
அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி - அதிபர் டிரம்பிற்கு இந்தியா பதிலடி
இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு ரூ.1.62 கோடி மோசடி
இந்தியா - இங்கிலாந்து மோதும் 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
மாணவிகளின் ஆடைகளை கழற்றிவிட்டு சோதனை..!
ராஜஸ்தானில் விமான விபத்து.. 2 விமானிகள் உயிரிழப்பு..!