--- --:--:-- --

சிஏஏ-க்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்..! பாஜக, அதிமுக, என்.ஆர். காங்., கடும் எதிர்ப்பு!!

fh

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக, பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்தனர்.

 

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இந்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. முதன்முதலாக கேரள சட்டசபையில் ஆளும் இடதுசாரி கூட்டணி கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனை எதிர்த்து அதிமுக, என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூன்று பேரும் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக கூட்டத்தை புறக்கணித்த நிலையில், ஆளும் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராகவும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon