திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு ஈபிள் டவர் முன் லவ் ப்ரோபோசல்!
ஈபிள் டவர் முன்பு தனது தோழியிடம் இளைஞர் ஒருவர் திரைப்பட பாணியில் காதலை முதன்முறையாக வெளிப்படுத்தும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவுகிறது. நியூயார்க்கை சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஷாம்சாவும், மும்பையில் பணிபுரியும் சிவானியும் ஒன்றரை ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபில் டவர் முன்பு வைத்து சிவானியிடம் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் ஹிந்தி பட பாடல்களை பாடிக்கொண்டு நடனம் ஆடியபடி தனது காதலை கூறினார்.

காதலை சிவானி ஏற்றதும் மோதிரத்தை அவரது கைவிரலில் ஷாம்சா அறிவித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




