பறக்கத் தொடங்கிய விமானம் , தரையிறங்கும் மற்றொரு விமானம் வைரல் வீடியோ

ஓடுபாதையில் இருந்து ஒரு விமானம் மேலெழும்பி பறக்கத் தொடங்கிய சில வினாடிகள் இடைவெளியில் இன்னொரு விமானம் தரையிறங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

 

டுவிட்டர் தளத்தில் வெளியாகியுள்ள 52 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் ஓடுபாதையில் விமானம் ஒன்று புறப்பட தயாரான நேரத்தில், மற்றொரு விமானம் அப்பகுதியில் பறக்கிறது. பிறகு அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து மேலெழும்பி பறக்க தொடங்கியதும் மற்றொரு விமானம் தரை இறங்கியது.

 

அந்த வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை. சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.


Leave a Reply