உலகிலேயே கொடிய விஷமுள்ள பாம்பை விழுங்கிய பச்சை தவளை

ஆஸ்திரேலியாவில் உலகிலேயே கொடிய விஷமுள்ள தைபான் இன பாம்பை பச்சை தவளை ஒன்று விளங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மூன்றாவது கொடிய விஷப் பாம்பாக கருதப்படும் தைபான் பாம்பு ஒன்று வீட்டின் பின்புறம் இருந்ததை பார்த்த பெண் ஒருவர் பாம்பு பிடிக்கும் வீரருக்கு தகவல் அளித்துள்ளார்.

 

அவர் அந்த வீட்டிற்கு செல்லும் வழியிலேயே மீண்டும் செல்போனில் பேசிய அந்த பெண் பாம்பை தவளை ஒன்று விழுங்கி விட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாம்பு பிடிக்கும் வீரர் தவளையிடமிருந்து பாம்பு தப்ப கூடும் என்று எண்ணி அங்கு சென்று தவளையை தம்முடன் எடுத்து வந்துள்ளார்.

 

ஆனாலும் பாம்பை விழுங்கிய தவளை சிறிது மாற்றமின்றி உயிருடன் இருந்துள்ளது. பாம்பை விழுங்கிக் கொண்டிருந்த போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Leave a Reply