--- --:--:-- --

குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணிடம் 6 சவரன் தாலிசெயின் பறிப்பு

9

சென்னை அருகே குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணிடம் தாலி செயினை பறித்துவிட்டு தப்பிய நபர் மற்றொரு பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட போது பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

அண்ணனூர் பாலாஜி நகரில் மேனகா என்பவர் தனது குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருந்தார். அப்போது வீடு புகுந்த மர்ம நபர் ஒருவர் அவரது 6 சவரன் தாலி செயினை பறித்த உடன் அருகில் பதினெட்டாவது தெருவில் சுலோச்சனா என்பவரது வீட்டிற்குள் புகுந்து அவரது செல்போனை பறித்து தப்ப முயன்றார்.

 

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 19 வயதாகும் பாபு என்பவன் கைது செய்யப்பட்டு கூட்டாளி விக்னேஷ் குமாரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் ஐயம்பக்கத்தில் ஒருவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon