செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கொள்ளை போன ரூ.18 லட்சம்…! ஊழியர்களே அபேஷ் செய்தது அம்பலம்!!

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் சில நாட்களுக்கு முன் வன்முறை வெடித்து, சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. அப்போது ரூ.18 லட்சம் கொள்ளை போனதாக கூறப்பட்ட நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களே இந்தப் பணத்தை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

 

கடந்த ஜனவரி 26-ந்தேதி அதிகாலை இந்த சுங்கச்சாவடியின் ஊழியர்களுக்கும், அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வன்முறைக் களமானது. இதில் போக்குவரத்து ஊழியர்களுடன் பொது மக்களும் சேர்ந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டனர்.சூறையாடப்பட்ட இந்த சுங்கச் சாவடியை சீர் செய்ய 15 நாட்கள் ஆகும் என்பதால், கட்டணமின்றி வாகனங்கள் சென்று வருகின்றன.

 

இதற்கிடையே, வன்முறை நடந்தேறி 3 நாட்கள் முடிந்த நிலையில், சுங்கச்சாவடியில் இருந்த ரூ.18 லட்சம் வசூல் பணம் கொள்ளை போனதாக நிர்வாகம் தரப்பில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த
சுங்கச்சாவடி ஊழியர்களே கொள்ளையில் ஈடுபட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

 

ரூ.18 லட்சம் அபேஷ் செய்த சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பேர் போலீசில் சரணடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.18 லட்சம் கொள்ளை போனதாக பொய் புகார் கொடுத்த நிலையில், சிசிடிவி கண்காணிப்பு காமிரா பதிவின் மூலம், ஊழியர்களே பணத்தை கொள்ளையடித்தது தெரிய வர, வேறு வழியின்றி போலீசில் சரணடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply