160 நிமிடம் பட்ஜெட் உரை வாசித்த நிர்மலா சீதாராமன்…! இதுவே சாதனைதானாம்!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை 160 நிமிடங்கள் வாசித்தார். நாடாளுமன்ற வரலாற்றில் இந்த பட்ஜெட் உரை தான் அதிக நேரம் வாசிக்கப்பட்டபட்ஜெட் உரை என்பது குறிப்பிடத்தக்கது

 

2020-2021-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வாசித்தார் . காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை ஆரம்பித்த அவர், பிற்பகல் 1.40 மணிக்கு தனது உரையை முடித்தார்.

பல்வேறு துறைகளின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, புதிய அறிவிப்புகள், மத்திய அரசின் புதிய பொருளாதார திட்டங்கள், வெளிநாட்டு முதலீடுகள், வருமான வரி சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்ற இந்த பட்ஜெட் உரை 160 நிமிடங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை வாசித்தபோது எதிர்க்கட்சியினர் அவ்வப்போது கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தாலும் தனது உரையை தொடர்ந்து வாசித்து முடித்தார். இதற்கு முன் நிதி அமைச்சர்கள் வாசித்த பட்ஜெட் உரையை அதிக நேரம் உரை வாசித்த சாதனையையும் நிர்மலா சீதாராமன் படைத்துள்ளார்.


Leave a Reply