ஊதிய உயர்வு கோரி நாடெங்கும் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று முதல் இரு நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

எனினும் இவ்வேலை நிறுத்தம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தி இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி ஊழியர் ஊதிய உயர்வு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

 

பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் நாளில் வேலைநிறுத்தம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply