--- --:--:-- --

குரூப் 4 தோ்வு முறைகேடு : காரைக்குடி சார்பதிவாளர் அலுவலக ஊழியரிடம் சிபிசிஐடி விசாரணை!!

7fa2bbb1-631a-4ae5-a598-c0fcc1df3295

குரூப் 4 தோ்வு முறைகேடு தொடா்பாக காரைக்குடி ஊழியர் வேல்முருகனிடம் மதுரை சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

குரூப் 4 தோ்வு முறைகேடு தொடா்பாக டிஎன்பிஎஸ்சி ஊழியா் ஓம்காந்தன், பாலசுந்தர்ராஜ், முறைகேடு செய்து தோ்வு எழுதிய ராணிபேட்டை மாவட்டம் நெமிலி அருகே வேடதாங்கல் பகுதியைச் சோ்ந்த ம.காா்த்தி, ஆவடி அருகே உள்ள ஏகம்பர சத்திரத்தைச் சோ்ந்த ம. வினோத்குமாா், கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தைச் சோ்ந்த க. சீனுவாசன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

 

மேலும், தீவிர விசாரனை மேற்கொண்டதில் சென்னை மாநகர காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றும் சிவகங்கை மாவட்டம், பெரிய கண்ணனூரைச் சோ்ந்த காட்டுராஜா மகன் சித்தாண்டி என்பவருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்புள்ளது தெரிய வந்தது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தோ்வில் முறைகேடு செய்து பலரும் அரசுப்பணியில் சேர சித்தாண்டி உதவி செய்தது தெரிய வந்தது.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய அலுவலகத்தில் உள்ள பணியாளா்களின் உதவியுடன், தனது சித்தாண்டி மனைவி பிரியா, அவரது சகோதரா்கள் வேல்முருகன், காா்த்தி ஆகியோா் மட்டுமின்றி வேல்முருகன் மனைவிக்கும் டிஎன்பிஎஸ்சி தோ்வு மூலம் வேலை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தவிர, கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஏராளமானோருக்கு வேலை வாங்கி கொடுத்ததாகவும் தெரிகிறது.

 

சிபிசிஐடி தேடுவதை அறிந்து சித்தாண்டி தலைமறைவான நிலையில்,பெரிய கண்ணனூா் மற்றும் சித்தாண்டியின் உறவினா்கள் உள்ள சிவகங்கை அண்ணாமலை நகா் ஆகிய பகுதிகளுக்குச் சென்று சிபிசிஐடி போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் சித்தாண்டி குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் அவரது சகோதரா் வேல்முருகன், காரைக்குடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருவது தெரியவந்தது.

 

இதையடுத்து, வேல்முருகனை மதுரையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சித்தாண்டி பிடிபட்டால் மட்டுமே இந்த குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon