நடிகர் சசிகுமார் நடிப்பில் நாளை வெளியாக இருந்த நாடோடிகள் 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நந்தகுமார் தயாரித்துள்ள அந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி எஃப்எம் பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில் படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உரிமையை அளிப்பதாக 5 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வேறு நிறுவனம் மூலமாக படத்தை வெளியிட தயாரிப்பாளர் நடவடிக்கை எடுத்ததால் தடை விதிக்க கூறப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி பிடி ஆஷா திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்காக கீ டெலிவரி மெசேஜ் தர க்யூப் நிறுவனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்தார்.