குரங்குகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க புது யுக்தி

உத்தரபிரதேசத்தில் தொல்லை அளிக்கும் குரங்குகளை பயமுறுத்த கிராம மக்கள் கரடி உடையை அணிந்தனர். அந்த மாநிலத்தின் சிகண்டர்பூர் கிராமத்தில் ஏராளமான குரங்குகள் உள்ளதாகவும் அவற்றால் தினந்தோறும் தொல்லை ஏற்படுவதாகவும் கிராமமக்கள் கூறியுள்ளனர்.

 

கிராமத்து குழந்தைகளை குரங்குகள் குறிவைத்து தாக்குவதாகவும் கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர். வனத்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நாடக நடிகர்களிடம் உடைகளை வாடகைக்கு எடுத்த கிராம மக்கள் அதனை அணிவித்து பகல் நேரத்தில் தெருத்தெருவாக உலா விட்டனர்.

 

கரடி வேடதாரிகளை உண்மையான கரடிகள் என்று எண்ணி குரங்குகள் தற்போது தங்கள் சேட்டையை காட்டுவதில்லை என்றும் அவற்றில் தொல்லை ஒழிந்தது எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply